மதுக்கடையை மூட வலியுறுத்தி மறியல்: 68 பெண்கள் உள்பட 116 பேர் கைது

திருச்சி  மாவட்டம், லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் மதுக்கடையை மூட வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை

திருச்சி  மாவட்டம், லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் மதுக்கடையை மூட வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 68 பெண்கள் உள்ளிட்ட 116 பேரைப் போலீஸார் கைது செய்தனர். 
லால்குடி அருகே சிறுகனூர் காவல் எல்லைக்குட்பட்ட தச்சன்குறிச்சி ஊராட்சியில் பாருடன் கூடிய அரசு மதுபானக் கடை  உள்ளது. இந்த மதுபானக் கடையினை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்வேறு புகார்கள் அளித்தும் பலனில்லையாம். 
இதனால் ஆத்திரமடைந்த இப் பகுதி மக்கள் தச்சன்குறிச்சி நால்ரோட்டில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு அப்பகுதி பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி வருவாய் வட்டாட்சியர் சத்ய பாலகங்காதரன், லால்குடி காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்னி. கட்சியின் புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரஜினி உள்பட 68 பெண்கள் என மொத்தம் 116 பேரையும் சிறுகனூர் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com