தனியார்மயத்தைக் கண்டித்து திருச்சி விமான நிலைய ஊழியர்கள் டிச. 28-இல் வேலைநிறுத்தம்

விமான நிலையங்கள் தனியார்மயமாவதைக் கண்டித்து, திருச்சியில் விமான நிலைய ஆணையக் குழும  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

விமான நிலையங்கள் தனியார்மயமாவதைக் கண்டித்து, திருச்சியில் விமான நிலைய ஆணையக் குழும  ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 
விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது.  அண்மையில் ஆமதாபாத்,  ஜெய்ப்பூர், மங்களூர், திருவனந்தபுரம், லக்னௌ, குவஹாட்டி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார்மயத்தைக் கண்டித்து விமான நிலைய ஆணையக் குழும ஊழியர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 
கடந்த வாரத்தில் டிசம்பர் 10 முதல் 12  வரையிலான  நாள்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை பகல் நேர உணவு இடைவேளையில் விமான நிலைய வளாகத்துக்குள் கண்டன  ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். விமான நிலைய ஆணையக்குழும ஊழியர்கள் சங்க திருச்சி கிளை தலைவர் யுவராஜேஷ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். 
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து யுவராஜேஷ் கூறுகையில், மத்திய அரசு விமான நிலையங்களை தனியார்மயமாக்கி வருவது கண்டிக்கத்தக்கது. இதனைக் கண்டித்து பல்வேறு வகையிலான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வரும் வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதனையடுத்து டிச. 28 ஆம் தேதி ஒருநாள் அனைவரும் விடுப்பு எடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com