Enable Javscript for better performance
இளம்பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலா என்கிற மல்லிகா (25). இவருக்கும், மணப்பாறை பண்ணாங்கொம்பு பகுதியைச் சேர்ந்த தினேஷுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உ ள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தினேஷ், தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து சென்று விட்டார்.
    இதனால் விரக்தியில் இருந்த மல்லிகா செவ்வாய்க்கிழமை உணவில் விஷத்தை கலந்து சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் மல்லிகாவை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். கண்டோன்மென்ட் மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் கோட்டாட்சியர் தனி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai