Enable Javscript for better performance
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்றச் சென்ற கணவரும் சாவு- Dinamani

சுடச்சுட

    

    இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்றச் சென்ற கணவரும் சாவு

    By DIN  |   Published on : 09th February 2018 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்றச் சென்ற கணவரும் தீயில் கருகி உயிரிழந்தார்.
    திருச்சி கே.கே. நகர், உஸ்மான் அலி நகர் 2ஆவது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் குட்ஷெட்டில் உள்ள லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் சங்கத் தலைவராக இருந்து வந்தார். இவரது மனைவி சத்யா (35).
    இந்நிலையில், புதன்கிழமை கணவன்-மனைவி இடையே மீன் குழம்பு வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சத்யா தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்வதாக மிரட்டினார். அப்போது, எதிர்பாராதவிதமாக உடலில் தீ பற்றியது. இதனைக் கண்ட சுரேஷ், மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில், அவரது உடலிலும் தீ பற்றி எரிந்தது. இவர்களது அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு புதன்கிழமை இரவு சத்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அடுத்த சில மணி நேரங்களில் சுரேஷும் உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai