Enable Javscript for better performance
மணல் கடத்தல்: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், கொக்குவெட்டி கருப்பண்ணசாமி கோயில் அருகே வேனில் மணல் கடத்தியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    கொக்குவெட்டி கருப்பண்ணசாமி கோயில் பின்புறம் உள்ள தைலமரக்காட்டு பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    அப்போது, வேனில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த முசிறி மேலத்தெரு ராமசாமி மகன் ராஜேஷை (34) போலீஸார் கைது செய்தனர். மேலும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
    லால்குடியில்: லால்குடி காவல் உதவி ஆய்வாளர் சதீஸ்குமார், பின்னவாசல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியே மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, லாரியில் வந்த தொட்டியம் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் சூர்யகுமார் (24), குளஞ்சி மகன் முத்துசாமி (17) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai