Enable Javscript for better performance
வரதட்சணை வழக்கில் ராணுவ வீரரின் தந்தை கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம் துவாக்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். பெல் ஒப்பந்த பணியாளர். இவரது மகள் சலோமி (23). இவருக்கும் காந்திச் சந்தை வரகனேரி பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ராணுவ வீரரான அலெக்ஸ் பவுல்ராஜ் (29) என்பவருக்கும் திருமணம் செய்வதாக, கடந்த செப்டம்பரில் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது, சீர்வரிசையாக இருசக்கர வாகனம், 15 பவுன் நகைகள் மற்றும் பொருள்கள் தருவதாகவும் முடிவு செய்யப்பட்டது. அண்மையில், மணமகன் வீட்டார் திடீரென 40 பவுன் நகைகளும், கார் மற்றும் ரொக்கமாக ரூ. 4 லட்சம் வரதட்சணையாக தரவேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.கடந்த இரு தினங்களுக்கு முன், அலெக்ஸ்பவுல்ராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது போன்ற படம் முகநூலில் வெளியாகியுள்ளது. இது குறித்து ஜேசுராஜ் தரப்பில் கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லையாம்.
    இந்நிலையில் ஜேசுராஜ் தரப்பினர் புதன்கிழமை திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீஸார் அலெக்ஸ்பவுல்ராஜிடம் விசாரணை நடத்தச் சென்றபோது அவர் தலைமறைவாகியுள்ளார். அவரது பெற்றோரிடம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில் வரதட்சணை கேட்டது உறுதியானது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜார்ஜை கைது செய்தனர். தலைமறைவான பவுல்ராஜ், அவரது தாயார் ஆண்ட்ரூஸ் இருவரையும் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai