Enable Javscript for better performance
இருவழிப்பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி- தஞ்சாவூர் ரயில் வழித்தடத்தில் சோளகம்பட்டி- தஞ்சாவூர் இடையே இருவழிப் பாதை தொடர்பான பொறியியல் பணி நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் 3 நாள்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
    திருச்சி - தஞ்சாவூர் ரயில் வழித்தடத்தில் சோளகம்பட்டி- தஞ்சாவூர் இடையே இருவழிப்பாதைக்கான பொறியியல் பணி சனிக்கிழமை ( மார்ச் 24) முதல் திங்கள்கிழமை வரை நடைபெறஉள்ளது.
    இதன் காரணமாக வண்டி எண் 76820/76821 திருச்சி-தஞ்சாவூர்- திருச்சி பயணிகள் ரயில், வண்டி எண் 76806/76805 திருச்சி- மன்னார்குடி- திருச்சி பயணிகள் ரயில் சனிக்கிழமை ( மார்ச் 24) முதல் 26 ஆம் தேதி வரை முழுமையாகவும், வண்டி எண் 76851/76854 காரைக்கால்- திருச்சி- காரைக்கால் பயணிகள் ரயில் தஞ்சாவூர்- திருச்சி இடையே மார்ச் 24 முதல் 26 ஆம் தேதி வரை பகுதியாகவும்ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண் 76851 காரைக்கால்- திருச்சி பயணிகள் ரயில் சாலியங்கலத்தில் சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை (மார்ச் 26) வரை 40 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு பின்னர் புறப்பட்டுச் செல்லும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai