Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும் திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்கணித்து கைகளில் சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்சி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப்பிரதிநிதிகள் ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் அயிலை சிவ. சூரியன், தமாகா விவசாய அணி மாநிலத்தலைவர் புலியூர் நாகராஜன், அய்யன் வாய்க்கால் பாசன தாரர் சங்க ஒருங்கிணைப்பாளர் என். வீரசேகரன், காவிரி-டெல்டா நீர்ப்பாசன விவசாயிகள் சங்க செயலர் கே.பி. காந்திபித்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
    புறக்கணிப்பு: ஆனால், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப. சின்னத்துரை தலைமையில் திரண்டுவந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், குறைதீர் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், ஆட்சியர்அலுவலகம் முன்பாக கைகளில் மண்சட்டி, திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai