Enable Javscript for better performance
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்ஸவ கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

    By DIN  |   Published on : 24th March 2018 04:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் கோமளவல்லி தாயார் பங்குனி உத்திர பிரமோத்ஸவம் மற்றும் திருக்கல்யாண மகோத்ஸவ விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    வைணவத் தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3 வது மிகப்பெரிய தலமாக கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் போற்றப்படுகிறது. இக்கோயிலில் கோமளவல்லி தாயாருக்கு வியாழக்கிழமை இரவு பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை கோயில் கொடி மரத்தில் கருடக் கொடி ஏற்றப்பட்டது.
    அப்போது உற்சவர் கோமளவல்லி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் கொடி மரம் முன் எழுந்தருளினார். இரவு தங்க மங்கள கிரியில் தாயார் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து வரும் 30 ஆம் தேதி வரை காலை நேரங்களில் பல்லக்கிலும், இரவு பலவித வெள்ளி வாகனங்களிலும் தாயார் புறப்பாடு நடைபெறும்.
    விழாவின் சிறப்பம்சமாக 31 ஆம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை வெள்ளி ரதத்தில் தாயார் உள்பிரகார புறப்பாடும், 11 மணிக்கு தீர்த்தவாரியும், ஏப். 2 ஆம் தேதி இரவு திருக்கல்யாண மகோத்சவம், மறுநாள் 3 முதல் 6 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு விடையாற்றி சேவை செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai