Enable Javscript for better performance
பொறியாளர் தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் கணினி அமைப்பு பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் வெள்ளிக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
    திருவெறும்பூர் நேரு நகர் பிம் குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மகன் தேவநேசன் (32). பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில் கணினி அமைப்பு பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
    பிரசவத்துக்காக மனைவி அவரதுதாய் வீட்டுக்குச் சென்று விட்டதால், தேவநேசன் கடந்த 15 நாள்களாக தனியாக இருந்து வந்துள்ளார்.
    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
    போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் வயிற்றுவலி காரணமாக நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்த தேவநேசன், கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும்தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai