Enable Javscript for better performance
வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புக் காவலில் கைது- Dinamani

சுடச்சுட

    

    வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புக் காவலில் கைது

    By DIN  |   Published on : 24th March 2018 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாநகரில் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புக் காவலின் கீழ் வெள்ள்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
    காந்தி மார்க்கெட் அருகிலுள்ள தஞ்சாவூர் சாலை அல்முஹம்மதியா பள்ளிவாசல் அருகே கடந்த 3 ஆம் தேதி மன்னார்புரம் செங்குளம்காலனியைச் சேர்ந்த த. விக்னேசுவரன் (32) நின்று கொண்டிருந்த போது, அவரை கத்தியைக் காட்டி மிரட்டி கேமரா, செல்போன், ரூ.700 ரொக்கம் ஆகியவற்றை திருச்சி பாலக்கரை ஜெயில்பேட்டை குடிசைமாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஆ. கிளிண்டன் என்கிற அஜித் (20) பறித்துச் சென்றார்.
    இதுகுறித்து காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விக்னேசுவரன் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நிக்சன் வழக்குப்பதிந்து கிளிண்டனை கைது செய்தார்.
    இதைத் தொடர்ந்து அவரைப் பற்றி விசாரணை மேற்கொண்ட போது, காந்தி மார்க்கெட் , பாலக்கரை காவல் நிலையங்களில் தலா 2, தில்லைநகர், கோட்டை காவல் நிலையங்களில் தலா ஒன்று என வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.
    இதையடுத்து கிளிண்டனை குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாநகரக் காவல் ஆணையருக்கு காவல் ஆய்வாளர் நிக்சன் அறிக்கை அளித்தார்.
    இதன் பேரில், கிளிண்டனை குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்வதற்கான உத்தரவை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்தார். இதற்கான ஆணை திருச்சி சிறையில் உள்ள கிளிண்டனிடம் வெள்ளக்கிழமை அளிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai