Enable Javscript for better performance
அடையாளம் தெரியாதவாகனம் மோதி தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி  உயிரிழந்தார்.
    திருச்சி விமானநிலையம் கீழப்புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஜோதிவேல் (45). கூலித்தொழிலாளியான இவர், தினமும் அதிகாலையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். 
    வெள்ளிக்கிழமை அதிகாலையும் இதேபோல, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். விமானநிலையத்துக்கும், கருப்பண்ணசுவாமி கோயிலுக்கும் இடையே உள்ள பகுதியில் நடந்து வந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஜோதிவேல் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. 
    இதில், பலத்தக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
    இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதுகுறித்து திருச்சி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai