Enable Javscript for better performance
அரசு இசைப் பள்ளியில் தமிழிசை விழா- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்ட அரசு இசைப் பள்ளயில் தமிழிசை விழா மற்றும் 21ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    விழாவை கலைபண்பாட்டுத்துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் தொடக்கி வைத்தார். 
    ஸ்ரீரங்கம் பரதநாட்டியாலயா நிறுவனர் ரேவதி முத்துசாமி, முனைவர் ப. நடராஜன், அரசு இசைப் பள்ளி தலைமையாசிரியர் கு. சகாயராணி, மிருதங்க ஆசிரியர் பா.சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில், இசைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
    விழாவில்,  சிறப்பு மங்கல இசையை ஆமூர் வெங்கடேசன், உறையூர் நீலகண்டன், விராலிமலை கார்த்திக், குமாரவயலூர் நல்லுக்குமார் ஆகியோர் இசைத்தனர். 
    இதன்தொடர்ச்சியாக தமிழிசையை யுவபுரஸ்கர் விருது பெற்ற சுவாமிமலை பா. சுரேஷ் குழுவினர் வழங்கினர். 
    பரத நாட்டிய நிகழ்ச்சியை சலங்கை அகாதெமி நிறுவனர் விஜயா முகுந்தன் குழுவினர் 
    வழங்கினர். விழாவில், இசைப் பள்ளி மாணவர், மாணவிகள், இசைக் கலைஞர்கள், தமிழிசை ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai