Enable Javscript for better performance
இளைஞர் கொலை வழக்கில் வழக்குரைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் இளைஞரை கொலை செய்த வழக்கில், வழக்குரைஞர் வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார்.
    திருச்சி, பாலக்கரை கீழப்புதூர் 2-ஆவது தெருவை சேர்ந்த வீரமலை என்பவரின் மகன் ஹேமந்த்குமார். இவர், ஜனவரி 20-ஆம் தேதி அரியமங்கலம் உய்யகொண்டான் வாய்க்கால் அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுதொடர்பாக, ஏற்கெனவே 6 பேர் கைது கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், அதே பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆ. கோபிகண்ணன் (32) தூண்டுதலின் பேரில் கொலை செய்ததாகவும்,  இறந்துபோன ஹேமந்த்குமாரின் சகோதரர் சங்கருக்கும், வழக்குரைஞர் கோபிகண்ணனுக்கும்  முன்விரோதம் இருந்துள்ளது.  இதனால்,  இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாகவும், அதன் அடிப்படையில்தான் ஹேமந்த்குமார் கொலை செய்யப்பட்டார் என தெரிவித்தனர்.  இதையடுத்து தலைமறைவான வழக்குரைஞர் கோபிகண்ணனை தேடி வந்தனர். 
    இந்நிலையில், திண்டுக்கல்லில் கோபிகண்ணன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வியாழக்கிழமை நள்ளிரவு போலீஸார் திண்டுக்கல் சென்று அவரை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai