Enable Javscript for better performance
என்.ஐ.டி.யின்  ஓய்வு பெற்றஅதிகாரி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்சி துவாக்குடி வாழவந்தான்கோட்டை ஈச்சங்காடு மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (65). தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது 2 மகன்களும் கனடாவில் வசித்து வருகின்றனர். இதனால் கண்ணன் மட்டும் வாழவந்தான்கோட்டை பகுதியில் வசித்து வந்தார். தனிமையில் வாழும் நிலையை எண்ணியதால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுடன் காணப்பட்ட கண்ணன், வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து துவாக்குடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai