Enable Javscript for better performance
ஏப். 3இல் அதிமுக உண்ணாவிரதம்: குடும்பத்தோடு பங்கேற்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஏப். 3இல் அதிமுக உண்ணாவிரதம்: குடும்பத்தோடு பங்கேற்க அழைப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து  ஏப்ரல் 3 ஆம் தேதி அதிமுக சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குடும்பத்தோடு அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாநகர் மாவட்ட செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ப. குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி கண்டோன்மென்ட்  பயணியர் விடுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,  மக்களவை உறுப்பினரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான ப. குமார் தலைமை வகித்தார். அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    கூட்டத்தில்,  சிந்தாமணி அண்ணா சிலை அருகே ஏப். 3இல் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுகவினர் குடும்பத்தோடு பங்கேற் வேண்டும் என ப. குமார் அழைப்பு விடுத்தார்.
    நிகழ்ச்சியின் போது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்டோர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அணி மாநகர் மாவட்டச் செயலாளர் எடத்தெரு ரவிச்சந்திரன் தலைமையில், அதிமுகவில் இணைந்தனர்
    கூட்டத்தில், மாநில வழக்குரைஞர்கள் அணி பிரிவு துணைச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாக்குலின், அருள்ஜோதி, அதிமுக பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பத்மநாதன், கார்த்திகேயன், ஜெயபால், மீரான், செல்வராஜ், சகாபுதீன், ஒன்றியச் செயலாளர்கள் முத்துக்கருப்பன், அழகேசன் மற்றும் வட்ட, பகுதிச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai