Enable Javscript for better performance
ஏப்.3 முதல் நீச்சல் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஏப். 3 முதல் 6 கட்டங்களாக நீச்சல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
    இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சார்பில், பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர், மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம். தகுதியான நீச்சல் பயிற்றுநரால் 12 நாள்களுக்கு நீச்சல் கற்றுத்தரப்படும். இந்த பயிற்சி 6 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
    முதல்கட்டமாக ஏப்.3ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்.17 முதல் 29 வரையும், மூன்றாம் கட்டமாக மே 2 முதல் 15 வரையும், நான்காம்  கட்டமாக மே 16 முதல் 29 வரையும்,  ஐந்தாம் கட்டமாக மே 30 முதல் ஜூன் 12 வரையும்,  ஆறாம் கட்டமாக ஜூன் 13 முதல் 26ஆம் தேதி வரையும் பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் பயிற்சி அளிக்கப்படும்.
    மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கு காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையும், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படும். 8 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.  விருப்பமுள்ளவர்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்துக்கு நேரில் வருகை தந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு 
    மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai