Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம்:கருப்புக் கொடியேற்றி பாமக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம்: கருப்புக் கொடியேற்றி பாமக போராட்டம்

    By DIN  |   Published on : 31st March 2018 09:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு முடிந்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் பாமக சார்பில் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் அன்புமணி ராமதாஸ் எம்பி, தனது வீட்டில் வெள்ளிக்கிழமை கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தார். 
    இதன் தொடர்ச்சியாக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
    திருச்சி மாநகர் மாவட்ட பாமக சார்பில், நர்தர்ஷா பள்ளிவாசல், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சுப்பிரமணியம், தாராநல்லூர், உறையூர், கிராமப்பட்டி, எடமலைப்பட்டி புதூர் ஆகிய பகுதிகளில் அக்கட்சியினர் பதாகை அமைந்துள்ள இடங்கள், ஆட்டோ சங்கம், தொழில் சங்கம் அமைந்த பகுதிகள் மற்றும் தெருவோரக்கடைகள், வீதிகளின் நுழைவுப் பகுதிகள், தெருக்களின் மின்கம்பங்கள் என அனைத்துப்பகுதிகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. 
    மேலும், மாநகர் மாவட்ட செயலர் திலீப்குமார் தலைமையில், அக்கட்சியினர் வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டப்பட்டது. தொடர்ந்து கருப்புக்கொடிகளும் ஏற்றப்பட்டு வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai