Enable Javscript for better performance
ஜெயலலிதா பிறந்தநாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    துவரங்குறிச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் தலைமை வகித்தார்.  நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  வழங்கினார். இதில், சுற்றூலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, மக்களவை உறுப்பினர் ப.குமார், மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    நகை பறிப்பு: இவ்விழாவில் நலத்திட்ட உதவிகள் பெற வந்த மருதம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மனைவி வேம்பாயி கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியையும், தொட்டியப்பட்டியைச் சேர்ந்த சேதுமலைராஜா மனைவி நாகலட்சுமியிடமிருந்து 4 பவுன் தங்க சங்கிலியையும் மர்ம நபர்களால் பறித்துச் சென்றனர்.  இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai