Enable Javscript for better performance
"தமிழ்த் தேசியப் போராளியாக திகழ்ந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்'- Dinamani

சுடச்சுட

    

    "தமிழ்த் தேசியப் போராளியாக திகழ்ந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்'

    By DIN  |   Published on : 31st March 2018 09:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்த் தேசியப் போராளியாகத் திகழ்ந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றார் தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் இ. சூசை.
    திருச்சி பைந்தமிழ் இயக்கத்தின் 49 ஆம் மாத பாப்பொழிவு ஆய்வரங்கு,  மனோன்மணியம் சுந்தரனார், ந.மு.வே., பாவலரேறு பெருஞ்சித்திரனார், வ.சு.ப. மாணிக்கனார்,  இறைக்குருவனார், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா பிறந்த நாள் விழா அண்மையில் நடைபெற்றது.
    தொடர்ந்து நடைபெற்ற ஆய்வரங்கில், பாவலரேறுவின் பன்முகத்தமிழ்ப்பணி  என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியது:  பாவலரேறு பெருஞ்சித்திரனார் சிறந்த தனித்தமிழ்ப் பாவலராய் விளங்கியவர். தமிழ் இனம், மொழி, நாடு ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கப் பாடுபட்டவர். தமிழ்த் தேசியப் போராளியாகத் திகழ்ந்தவர். 
    தானேற்ற அஞ்சலகப் பணியைத் துறந்து தேசிய விடுதலைக்குப் பாடுபட்டு பலமுறை சிறை சென்றவர். பாவலராய், உரையாசிரியராய், இதழாசிரியராய், குழுகாயக் காவலராய்த்திகத்த  பன்முகப் பெற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றார் சூசை.
    இந்த நிகழ்வுக்கு பைந்தமிழ் இயக்க அமைப்பாளர் பழ. தமிழாளன் தலைமை வகித்தார். கு. ம.சுப்பிரமணியன்,, சையது முர்துஷா அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சி. வேலுசாமி முன்னிலை வகித்தனர்.
    மாணவர் அரங்கத்தில் தூய வளனார் கல்லூரி ஆய்வுப்பட்ட மாணவிகள் சா.  இசுடெல்லாமேரி,  உலோ.  உரூபா, மா. சங்கீதா, சி. ரேவதி ஆகியோர் முறையே  தங்கப்பாவின் சீர்தமிழ்ப்பணி, உரைவேந்தர் ந.மு.வே,  வாய்மையர் வ.சுப.மா,  இறைக்குருவனாரின் எழிற்றமிழ்பணி  ஆகிய தலைப்புகளிலும், மரபுப்பா அரங்கத்தில் முனைவர் பழ.தமிழாளன், ஆ.சவரிமுத்து ஆகியோர் தமிழ்காத்த தாலமுத்து நடராசன்,  தமிழ்த்தாயின் மகுடம் மனோன்மணியார் என்ற தலைப்புகளிலும் பேசினர்.
    ஈகவரசன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.  நிகழ்வில் தங்கவேல், புலவர் பழனியாண்டி, சி.மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
    நிகழ்வை பைந்தமிழ் இயக்கத்தின் உதவி இயக்குநர் சொ. வேல்முருகன் தொகுத்தளித்தார்.  நிறைவில் புலவர் தண்டபாணி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai