Enable Javscript for better performance
தாலிச் செயின் பறிப்பு திருடர்கள் 3 பேர் கைது: 20 பவுன் நகைகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தாலிச் செயின் பறிப்பு திருடர்கள் 3 பேர் கைது: 20 பவுன் நகைகள் பறிமுதல்

    By DIN  |   Published on : 31st March 2018 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டம்,  லால்குடி அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட  3 பேர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து  20  பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ரோஸ்லின்மாலாவின் 5 பவுன், கல்லக்குடி பகுதியைச் சேர்ந்த தாமரைச் செல்வியின் 5 பவுன்,  புஞ்சைசங்கேந்தியைச் சேர்ந்த சித்ராவின் 5 பவுன்,  காமாட்சியின் 5 பவுன் தாலிச் செயின் ஆகியவற்றை பறித்துச் சென்றவர்கள் குறித்து கல்லக்குடி போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 
    இந்நிலையில் கல்லக்குடி பகுதியில் பிச்சை மகன் சின்னையன் என்பவரை மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களை அப் பகுதி மக்கள் விரட்டி பிடித்து கல்லக்குடி போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில்,  பெரம்பலூர் மாவட்டம், மேலஉசேன் நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் தமிழ்மணி (35),  பெரியம்மா பாளையத்தைச் சேர்ந்த தன்ராஜ் மகன் சின்னதுரை (20),  அரியலூர் மாவட்டம், விளாகம்  ராமராஜ் மகன் சுதாகர் (36) ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் தான் தொடர் தாலிச் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து  அவர்களிடமிருந்து 2 கத்தியும்,  20 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai