Enable Javscript for better performance
பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 5 கிலோ காஸ் சிலிண்டர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 5 கிலோ காஸ் சிலிண்டர்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிமுகம்

    By DIN  |   Published on : 31st March 2018 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி உள்பட 9 மாவட்டங்களில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 5 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விற்பனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடங்கியுள்ளது.
    கல்வி நிறுவனங்களில் பயில்வோர், பிபிஓ நிறுவனங்களில் பணியாற்றுவோர், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில்  பணியாற்றுவோர் தங்கள் சொந்த ஊரை விட்டு வேறு இடங்களில் தனியே வசிக்கும் போது, சமையல் காஸ் இணைப்பைப் பெறுவதிலும், காஸ் சிலிண்டர்களை பெறுவதிலும் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது. உரிய முகவரிகளை அளிப்பதிலும்,  முகவர்களை சந்தித்து இணைப்புப் பெறுவதிலும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
    இந்த சிக்கலுக்களுக்குத் தீர்வு காணும் வகையில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காஸ் சிலிண்டர் விற்பனையைத் தொடங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்தது. அதன்படி திருச்சி கோட்ட அலுவலகத்துக்குள்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர்,  கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
    திருச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள  பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்,  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல் இயக்குநர் ( தமிழ்நாடு மாநில அலுவலகம்) ஆர். சித்தார்த்தன் விற்பனையைத் தொடக்கி வைத்தார். தலைமைப் பொது மேலாளர் வி.கோபாலகிருஷ்ணன்  5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை குறித்த உரையை வழங்கினார்.
    ஒரு அடையாள ஆவணம் போதும் :  அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணத்தை அளித்தால் உடனடியாக இணைப்பு அளிக்கப்பட்டு 5 கிலோ சிலிண்டரை பெற்றுச் செல்லலாம். முதல் முறையாக சிலிண்டரை பெறும் போது ரூ.1360 கட்டணம் செலுத்தி பெறலாம். பிறகு அடுத்த சிலிண்டரை பெறும் போது ரூ. 360 மட்டும் செலுத்தினால் போதும்.  சிலிண்டர் வேண்டாம் என்று  திரும்பி அளித்தால் ரூ.500 அளிக்கப்படும். என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமை வட்டார மேலாளர் என். ரவிசங்கர்  5 கிலோ காஸ் சிலிண்டரின் சிறப்புகள் குறித்து பேசினார்.  எல்.பி.ஜி. முகவர்கள், பெட்ரோல் விற்பனை நிலைய முகவர்கள் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.  தலைமைக் கோட்ட மேலாளர் பாபு நரேந்திரா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai