Enable Javscript for better performance
பெண்ணிடம்14 பவுன் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    துறையூரில் நடந்த சென்ற பெண்ணிடம் 14 சங்கிலியை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனர்.
    துறையூர் தெற்கு மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் நாகரெத்தினம் பிள்ளை. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (72). இவர் செங்காட்டுப்பட்டி சென்று விட்டு துறையூருக்கு பேருந்தில் திரும்பினார். ஆலமர பேருந்துநிறுத்தம் அருகே இறங்கி நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஜெயலட்சுமி அணிந்திருந்த 14 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai