Enable Javscript for better performance
விடத்திலாம்பட்டி முருகன்கோயிலில் சிறப்பு அபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டி குன்றின்மேல் அமர்ந்து அருள்பாளிக்கும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை பால்குட உற்ஸவம் நடைபெற்றது.  இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி சுமந்து, அலகு குத்தி  பாலமுருகன் கோயிலிலிருந்து புறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலை அடைந்தனர். இதையடுத்து  சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai