Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை: இன்று கோரதம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை: இன்று கோரதம்

    By DIN  |   Published on : 31st March 2018 09:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் பங்குனித் தேரோட்ட விழாவின் ஒன்பதாம் நாளான வெள்ளிக்கிழமை நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.  
    பங்குனி தேரோட்ட விழா (ஆதிபிரம்மோத்ஸவம்) கடந்த 22ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரைவீதிகளில் வலம் வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரத்தையொட்டி நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.
    இதற்காக நம்பெருமாள் காலை 6 மணிக்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளி ஆழ்வார் திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை அடைந்தார். பின்னர் தாயாரும், நம்பெருமாளும் சண்டையில்  சமாதானம் கண்டருளியதையடுத்து முன்மண்டபத்தை நண்பகல் 12 மணிக்கு நம்பெருமாள் அடைந்தார். அதன்பின் முதல் ஏகாந்தம் நிகழ்ச்சி 12.30 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரை நடைபெற்றது. 
    தளிகை அமுது செய்து நம்பெருமாள், தாயார் புறப்பட்டு பங்குனி உத்திர மண்டபத்தை பகல் 2.15 மணிக்கு அடைந்தனர். நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவை 3 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்றது. நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவையை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  இரவு 10.30 மணிக்கு சின்னபெருமாள் தீர்த்தவாரி கண்டருளி தாயார் சன்னதியை அடைந்தார்.11.30 மணிக்கு 2ஆவது ஏகாந்தம் (கத்யத்ரய கோஷ்டி சாற்று முறை) நடைபெற்றது.  முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் (கோரதம்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai