Enable Javscript for better performance
கடத்தல் மணலுடன்4 லாரிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி அருகே மணல்  4  மணல் கடத்தல் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட மணிகண்டம் அருகேயுள்ள கோரையாற்றில் கொளுக்கட்டைக்குடி, தொரக்குடி பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்துமாறு வருவாய்த் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
    இதன்பேரில், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் சண்முகம், சிறப்பு வட்டாட்சியர் ராஜவேல் மற்றும் துணை வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை அதிகாலை கொளுக்கட்டைகுடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். இதையறிந்த மணல் கடத்தும் கும்பலானது மணல் லோடு ஏற்றிய லாரிகளை ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர். தகவலறிந்த வருவாய்த் துறையினர் அந்த 4 லாரிகளையும் மாற்று ஓட்டுநர் மூலம் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai