Enable Javscript for better performance
கணவரின் 2ஆவது திருமணத்தை தடுக்க கோரி பெண் புகார்- Dinamani

சுடச்சுட

    

    தனது கணவரின் 2ஆவது திருமணத்தை தடுத்து நிறுத்தக் கோரி திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குழந்தையுடன் வந்து பெண் ஒருவர் புகார் அளித்தார்.
    திருச்சி மாவட்டம், ஜீயபுரத்தை அடுத்த திருச்செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (35). விவாகரத்து பெற்று குழந்தையுடன் தனியாக வசித்து வந்த இவருக்கு இதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை 2ஆம் திருமணம் செய்து கொண்டாராம். 
    இந்நிலையில், வெங்கடேசனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாகவும்,  அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் அளிக்க குழந்தையுடன் வந்த சத்யா, திடீரென தரையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார். 
    இதையடுத்து போலீஸார் அவரை சமாதானப்படுத்தி புகார் மனுவைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai