Enable Javscript for better performance
கார் மோதி வங்கி மேலாளர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில்  வங்கி உதவி மேலாளர் உயிரிழந்தார்.
    விருதுநகர் மாவட்டம், காட்டூரை அடுத்த சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (45). திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக இருந்த இவர் கே.கே. நகரில் வீடு எடுத்து தங்கியிருந்தார். வியாழக்கிழமை காலை வழக்கம்போல மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு  புறப்பட்ட அவர், மன்னார்புரம் அருகே வரும்போது அந்த வழியாக வந்த கார் மோதி மயங்கி விழுந்தார். அப்பகுதியில் இருந்தோர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே முருகானந்தம் உயிரிழந்தார். இதுதொடர்பாக, திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai