Enable Javscript for better performance
திருச்சி என்ஐடியில் புதுமைப் படைப்புகளுக்கு விருதுகள்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி என்ஐடியில் புதுமைப் படைப்புகளுக்கு விருதுகள்

    By DIN  |   Published on : 18th May 2018 09:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி தேசிய தொழி ல்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) புதுமைப் படைப்புகளை உருவாக்கிய குழுவினருக்கு விருதுகளும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
    திருச்சி  தொழில்முனைவோர் மற்றும் அபிவிருத்தி மையம், பெங்களூரு சொனெட்டோ மென்பொருள் நிறுவனம் ஆகியன இணைந்து வர்த்தக அளவில் புதுமை தொழில்நுட்பத் திட்டங்களை ஊக்கும் வகையில்  போட்டிகளை நடத்தின.
    திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில்  நடைபெற்ற போட்டியில்  பேராசிரியர் வழிநடத்துதலில் மாணவ, மாணவிகள் குழுவினர் பங்கேற்று தங்களது  புதுமைப் படைப்புகளை அரங்கேற்றினர். 
    இதில் கையசைவில் செயல்படும் ரோபோ தொழில்நுட்பத் திட்டத்தை வர்த்தக முறையில் செயல்படுத்தும் திட்டத்தை உருவாக்கிய,  பேராசிரியர் திலகவதி வழிநடத்திய அமிர்தவர்சினி, பவானி, வித்யா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முதல் பரிசாக  ரூ. 25,000 பெற்றனர்.  2-ஆவது  பரிசாக ரூ. 15,000-ஐ  பேராசிரியர் ராகவன் வழிநடத்திய,  ஆதித்யா, விக்ரம், சக்திவேல், ஏலன், கெவின், சுனில்ஜோசப், ஜான் உள்ளிட்டோர் குழுவினர் பெற்றனர்.
    நுண்ணலைப் பொறியியல் தத்துவத்தின் கீழ் ஒரே கோபுரத்தின் (ஆண்டெனா)  மூலம்  பல்வேறு  தகவல்களை அனுப்பும், பெறும் முறையை வடிவமைத்தமைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது. போட்டிகளில் வென்ற குழுவினருக்கு என்ஐடி இயக்குநர் மினிசாஜி தாமஸ் பரிசு, விருதுகளை வழங்கிப் பாராட்டினார். 
    தரம் குறையாமல் குறைந்த செலவில் செயல்படுத்தும் வகையிலான  இத்திட்டங்களை இன்றைய சூழலில் ராணுவத்தில் உள்ள திட்டங்களுடன் இணைத்துச் செயல்படுத்த முடியுமாம். மேலும் இக்குழு தேர்வு செய்த புதிய படைப்புகள் குறித்து சர்வதேச இதழ்கள் மூன்றில் கட்டுரைகளாக பிரசுரிக்க கொள்கையளவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இளங்கலை பொறியியல் பிரிவு பயிலும் மாணவர்கள் 3 கட்டுரைகளை வெளியிடுவது  என்ஐடி  வரலாற்றில் முதல் முறையாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai