முதியோர், பெண்களை பாதுகாக்கும் "காவலன் செயலி' அறிமுகம்

முதியோர்,  பெண்களை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் செயலி அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முதியோர்,  பெண்களை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காவலன் செயலி அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாநகரக் காவல்துறை சார்பில், ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், காவலன் செயலியை அறிமுகம் செய்துவைத்து மாநகரக் காவல்துறை உதவி ஆணையர் ராமச்சந்திரன் பேசியது: தமிழகத்தில் ஆள்கடத்தல், கொலை,கொள்ளை, பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்கள் அவசர காலத்தில் போலீஸாரை தொடர்பு கொள்ள செல்லிடப் பேசி செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம், பொதுமக்கள் தங்களது அக்கம் பக்கத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
ஓஅயஅகஅச ஈண்ஹப் 100, ஓஅயஅகஅச நஞந என்ற இரண்டு செல்லிடப் பேசியை பயன்படுத்தி புகார் தெரிவிக்க வேண்டும்.
அவசர உதவி தேவைப்படும் தருணங்களில் 100 என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியைத் தொடுவதின் மூலம், நேரடியாக காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும். அதேநேரத்தில் தொடர்பு கொள்பவர்களின் முகவரியும் கட்டுப்பாட்டு துறைக்கு தெரியும். குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக இந்த காவலன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் முதியவர்கள் தனியாக செல்லும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அலைபேசியில் உள்ள இந்த செயலியை தொட்டால் போதும். கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று அங்கிருந்து 5 வினாடிகளில் அவரது அலைபேசிக்கு அழைப்பு வரும். அதே நேரத்தில் ஜிபிஎஸ் இயங்க தொடங்கி அலைபேசி கேமரா தானாகவே 15 விநாடிகளில் செயல்படத் தொடங்கும்.
பாதிக்கப்பட்ட நபர் பேசமுடியாத சூழ்நிலையில் இருந்தால் ஜிபிஎஸ் மூலம் இருக்கும் இடம் தெரிந்து அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும். நண்பர்கள் உறவினர்களுக்கு அவர்களது இருப்பிடம் குறித்து வரை படத்துடன் பகிரப்படும். இணையதள வசதியில்லாத இடங்களில் செயலியை உபயோகித்தவுடன் கட்டுப்பாட்டு அறைக்கு தானியங்கி குறுஞ்செய்தி எச்சரிக்கை மூலம் சென்றடையும்.
எனவே, பள்ளி மாணவிகள் அனைவரும் இந்த செயலியை அவரவர் செல்லிடப் பேசி எண்களில் பதிவிறக்கம் செய்து அவசர நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சித்ரா, பள்ளித் தலைமையாசிரியர் மீனலோசனி, உதவி தலைமையாசிரியர் லதா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com