மார்ச்சுக்குள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால்  மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் போராட்டம்: எஸ்.ஆர்.எம்.யூ

மார்ச் மாதத்துக்குள் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் மத்திய

மார்ச் மாதத்துக்குள் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றார் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா. 
ரயில்வே கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட்ட எஸ்.ஆர்.எம்.யூ. வேட்பாளர்கள் அனைத்து (19) இடங்களிலும் இயக்குநர்களாக வெற்றி பெற்றுள்ளனர். திருச்சியில் கடந்த இரு நாள்களாக முகாமிட்டிருந்த கண்ணையா, தேர்தல் முடிவு அறிவுப்புகளைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறியது,
தெற்கு ரயில்வேயில், நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் எஸ்ஆர்எம்யூ  வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி எதிர்பார்த்த வெற்றிதான். இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மத்திய அரசு 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது, ஆனால் கடந்த  9 ம்தேதி வந்த கடிதத்தில் சுமார் 2 லட்சம் குரூப்-டி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பவேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது.  
தெற்குரயில்வேயில் குறைந்த அளவில் பாதிப்பும், மற்ற ரயில்வேயில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  
இதனைக் கணக்கில் கொண்டு மார்ச் மாதம் வரை மத்திய அரசுக்கு அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அவகாசம் அளித்துள்ளோம்.  அதற்குள் கோரிக்கைகளை தீர்க்க அழைத்துப்பேசி நடவடிக்கை எடுக்காவிட்டால் 1924ஆம்ஆண்டு நடைபெற்றது போன்று மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும்வகையில் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட, அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது என்றார்.
அப்போது, துணைப் பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற இயக்குநர்கள் பலரும் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com