சுடச்சுட

  

  தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின்  25 ஆம் ஆண்டு விழா ( வெள்ளிவிழா)  திருச்சி உறையூரிலுள் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
  கல்விக் குழுமங்களின் தலைவர் சீனிவாசனின் 25 ஆண்டு கல்விச் சேவையைப் பாராட்டும் வகையில் நடத்தப்பட்ட விழாவில்,  குழுமங்களின் துணைத் தலைவர் அனந்தலட்சுமி கதிரவன், செயலர் நீல்ராஜ்,  ராஜபூபதி,  ராஜசேகர் ஆகியோர் பேசினர்.
  பெரம்பலூர் ராமகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தலைவர் சிவசுப்பிரமணியன்,  தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முன்னாள் முதல்வரும், ஆலோசகருமான மீனாட்சி,  துறையூர் சௌடாம்பிகா கல்விக் குழுமங்களின் தலைவர் ராமமூர்த்தி, சிவானி கல்விக் குழுமங்களின் தலைவர் செல்வராஜ்,  தூய வளனார் கல்லூரி  முன்னாள் முதல்வர் ஜான் பிரிட்டோ, தனலட்சுமி சீனிவாசன் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி நந்தகுமார்,  சிட்பண்ட்ஸ் தலைமை நிதி அலுவலர் யோகானந்த்,  பட்டிமன்றப் பேச்சாளர் சம்பத், பாரதி,   புதுக்கோட்டை பி.எஸ்.கே. கல்விக் குழுமங்களின் தலைவர்  கருப்பையா, பெரம்பலூர் நகராட்சி முன்னாள் தலைவர் மோகன் உள்ளிட்டோர் பேசினர்.விழாவில்  25 கிலோ எடையுள்ள கேக்கை தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் வெட்டினார்.  தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.  தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளியில் 25 ஆண்டுகளாகப் பணியாற்றும் செல்வமணி வாழ்த்துரை வாசித்தார்.
  நிகழ்வில், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக பள்ளித் தமிழாசிரியை சாந்தி வரவேற்றார்.  ஆங்கில ஆசிரியை கல்பனா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai