வெவ்வேறு இடங்களில் 3 பேரிடம் வழிப்பறி: மூன்று பேர் கைது

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் 3 பேரிடம், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் 3 பேரிடம், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செல்லாங்குப்பம் பால்வழித்தெருவைச் சேர்ந்தவர் க. சிவா, அவரது நண்பர் கிருஷ்ணகுமார் இருவரும் பழனியிலிருந்து திருச்சி வழியாக தஞ்சை செல்லும் பேருந்தில் ஏறி திருச்சிக்கு பயணச்சீட்டு வாங்கியுள்ளனர்.  அயர்ந்து தூங்கிய இவர்களை பேருந்து நடத்துநர்  அரியமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே இருவரையும் இறக்கிவிட்டுச் சென்றார். இதைடுத்து இருவரும் அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்துக்கு ஆட்டோவில் புறப்பட்டனர்.
இருட்டான பகுதிக்குச் சென்றபோது, ஆட்டோ ஓட்டுநரும் அவரது நண்பரும் சேர்ந்து சிவா மற்றும் அவரது நண்பர் வைத்திருந்த செல்லிடப்பேசி, அவர்கள் வைத்திருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். 
பின்னர் இருவரும் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ஆட்டோ பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஓட்டுநர், கணபதி நகர் அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெ. சத்தியேந்திரன் (24), அவரது நண்பர் கா. பாலசுப்பிரமணியம் (20)ஆகிய இருவரையும் கைது செய்து, செல்லிடபேசி மற்றும் பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வியாபாரியிடம் ரூ. 23,000 பறிப்பு : உறையூர் விவேகானந்தா நரைச் சேர்ந்தவர் பி. அசோக்குமார் (45).  மளிகை கடை வைத்துள்ளார். திங்கள்கிழமை கடைக்கு வந்த நபர் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி  ரூ. 23,000 பறித்துச் சென்றதாக உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து திருவானைக்கா பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த மீ. முத்துக்குமாரை (32) போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தொழிலாளியிடம் ரூ.10,000 பறிப்பு:
திருச்சி புத்தூர் வி.என்.பி. தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (33). இவர் அண்ணாமலை நகர் ( கரூர் புறவழிச்சாலை ) பகுதியில் உள்ள இருசக்கர வாகன விநியோக நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். திங்கள்கிழமை இவர், ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்துவதற்காக ரூ. 10,000ஐ எடுத்துச் சென்றார். 
பேருந்தைவிட்டு இறங்கி நடந்து சென்றபோது, அவ்வழியே சென்ற மர்ம நபர் ஒருவர் அவரது  கவனத்தை திசை திருப்பி, அவரிடமிருந்த பணப்பையை பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com