அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மாவட்டத்தில் 16 மையங்களில் நீட்' தேர்வுப் பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி 16 மையங்களில் சனிக்கிழமை தொடங்கியது.


திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி 16 மையங்களில் சனிக்கிழமை தொடங்கியது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12ஆம் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சேர்த்து நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 413 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் செப்.15ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
காணொலி காட்சி மூலம் 413 மையங்களிலும் பயிற்சி வகுப்பை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே. செங்கோட்டையன், முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
திருச்சியில் 16 மையங்கள்:
திருச்சி தூய வளனார் மேல்நிலைப் பள்ளி, பிஷப் ஹீபர் பள்ளி, எட்டரை, அயிலாப்பேட்டை, சோமரசம்பேட்டை, துவரங்குறிச்சி, மணப்பாறை, வையம்பட்டி, இனாம்குளத்தூர் மற்றும் துறையூர் அரசு மகளிர் பள்ளி, மண்ணச்சநல்லூர் மகளிர் பள்ளி, ஆண்கள் பள்ளி, புள்ளம்பாடி, பெருவளப்பூர், தொட்டியம் மகளிர் பள்ளி, முசிறி ஆண்கள் பள்ளி என 16 மையங்களில் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சனிக்கிழமை தொடங்கிய பயிற்சி வகுப்பில் 1,200 மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி வளனார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருட்டிணன் கலந்து கொண்டார். பயிற்சியை முன்னிட்டு 125 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சனி, ஞாயிறு மற்றும் அனைத்து விடுமுறை நாள்களிலும் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com