தாய் திட்டத்தில் உருவாக்கப்பட்ட விபத்து காயம் சிகிச்சை மையங்களை தீவிர சிகிச்சை பிரிவாக மாற்ற தமிழக அரசு மேலும் ரூ. 130 கோடி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் எஸ். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் தாய் திட்டத்தின் கீழ் விபத்து காயம் சிகிச்சை மையங்கள் 75 இடங்களில் அமைக்கப்பட்டதன் காரணமாக 20 சதவீத உயிரிழப்பு குறைந்துள்ளது. இந்த மையங்களை தீவிர சிகிச்சை பிரிவாக மாற்ற தமிழக அரசு மேலும் ரூ. 130 கோடி ஒதுக்கீடு செய்யவுள்ளது. இதனால் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்படுவதுடன் தேவையான உயர் மருத்துவ உபகரணங்கள் கிடைக்கும்.
உடல் உறுப்புதானத்தில் தமிழகம் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது நிகழாண்டும் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் அப்போதைய காலகட்டங்களில் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தற்போது ஊர் ஊராக சென்று கலந்து கொள்வது ஏன் என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
போலியோ சொட்டு மருந்து புகட்டும் தேதி மாற்றம்
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் குளமங்கலம் மலையக்கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சர் அளித்த பேட்டிச
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாகத்தான் போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகம் கடந்த 14 ஆண்டுகளாக புதிய போலியோ தொற்றில்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் ஏராளமான விருதுகளையும் தமிழகம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இன்னமும் போலியோ நோயை ஒழிக்க முடியவில்லை. உலகம் முழுவதும் போலியோ நோயை முழுமையாக ஒழிக்கும் வரையிலும் உலகம் முழுவதும் சொட்டு மருந்து புகட்டும் பணி நடைபெறும். இந்நிலையில், இந்தியாவின் மத்திய மருந்துத் தொழில்நுட்பக் குழுவினரின் நிர்வாகக் காரணங்களால் பிப். 3ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் தேதி தள்ளிப் போகிறது. முகாம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார் விஜயபாஸ்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 16 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் அகலும் இந்த ராசிக்கு!

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
