திருச்சியில் இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் திருநாவுக்கரசர்
By DIN | Published On : 01st April 2019 09:17 AM | Last Updated : 01st April 2019 09:17 AM | அ+அ அ- |

திருச்சி மக்களவைத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர் மாநகரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்.1) பிரசாரத்தை தொடங்குகிறார்.
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தேர்தல் பணிக்குழு அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்கும் திருநாவுக்கரசர், காலை 7.20 மணிக்கு உறையூர் வெக்காளியம்மன்
கோயிலில் தரிசனம் செய்து, தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
தொடர்ந்து அரவானூர், பாண்டமங்கலம், மேலகல்நாயக்கன் தெரு, மேட்டுத் தெரு, நாச்சியார் கோயில், டாக்கர் சாலை, பஞ்சவர்ணேசுவர சுவாமி கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, களத்துமேட்டுத்தெரு, வண்டிக்காரத் தெரு, உறையூர் குறத்தெரு, ராமலிங்க நகர், புத்தூர் மந்தையைத் தொடர்ந்து, வண்ணாரப்பேட்டையில் காலை பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
தொடர்ந்து, மாலை 4 மணிக்கு உய்யக்கொண்டான் திருமலையில் பிரசாரத்தை தொடங்கி, சாந்தாஷீலா நகர், எம்.ஜி.ஆர். நகர், வி.என்.பி. தெரு, தென்னூர் மந்தை, தில்லைநகர், ஆழ்வார்தோப்பு, சத்யாநகர், வாமடம், பீமநகர், புது ராஜா காலனி, மார்சிங்பேட்டை, மேலப்புதூர்,
ஒத்தக்கடை பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு, இரவு ஜங்ஷன் பகுதியில் நிறைவு செய்கிறார்.
வைகோ பிரசாரம் : திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ சிறப்புரையாற்றுகிறார்.