அதிமுக வேட்பாளருக்கு த.மா.கா. விவசாய அணி வாக்குசேகரிப்பு
By DIN | Published On : 04th April 2019 08:45 AM | Last Updated : 04th April 2019 08:45 AM | அ+அ அ- |

பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் முசிறியில் புதன்கிழமை வாக்குகளைச் சேகரித்தனர்.
முசிறி கைகாட்டி, கடைவீதி, துறையூர் சாலை உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் த.மா.கா. விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் காந்திப்பித்தன், த.மா.கா. ஒன்றியத் தலைவர் நல்லேந்திரன், நகரத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் ஜாகீர் உசேன், அதிமுக நகரச் செயலர் எம்.கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, வாக்குகளைச் சேகரித்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம்புலியூர் நாகராஜன் பேசும் போது, காவிரியில் தண்ணீர் வராததற்கும், 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறப்புக்கும் திமுகவின் அணுகுமுறையே காரணம். தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ், தமிழகத்தில் திமுகவுடனும் கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் வரும் என்றார் அவர்.