கல்வி உதவித்தொகை அளிப்பு
By DIN | Published On : 04th April 2019 08:57 AM | Last Updated : 04th April 2019 08:57 AM | அ+அ அ- |

முசிறியில் ஸ்ரீசாய் கல்வி அறக்கட்டளை சார்பில், நலிவடைந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் மற்றும் உயர்க்கல்விப் படிப்புக்கான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் எம்.பி.மோகன்ராஜ் தலைமை வகித்தார். வரகூர் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் புகழேந்தி விழாவில் பங்கேற்று கல்வி உதவித் தொகையை வழங்கினார். முசிறி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் சிவராஜ் கருத்தரங்க உரையாற்றினார். மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவில் ஒருங்கிணைப்பாளர் சு. மனோன்மணி நன்றி கூறினார்.