பாரதிதாசன் பல்கலை.யில் ஏப்.22 முதல் சுயதொழில் பயிற்சி வகுப்புகள்
By DIN | Published On : 04th April 2019 08:57 AM | Last Updated : 04th April 2019 08:57 AM | அ+அ அ- |

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகத்தில், ஏப்.22 ஆம் தேதி முதல் கோடைக்கால சுயதொழில் பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் சுயதொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ராம் கணேஷ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காஜாமலை வளாகத்தில் ஏப்.22 ஆம் தேதி தொடங்கும் சுயதொழில் பயிற்சி வகுப்புகள் மே 31 ஆம்தேதி வரை
நடைபெற உள்ளது. அபாகஸ், கணினி மென்பொருள், வன்பொருள், டேலி உள்ளிட்ட கணினித் தொடர்பான பயிற்சிகள், கீ போர்டு, ரோபோடிக்ஸ், ஆங்கில பேச்சுப் பயிற்சி உள்ளிட்ட 10 வகையான பயிற்சிகள் கற்றுத் தரப்பட உள்ளன. பயிற்சிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 20 ஆம் தேதி கடைசி நாளாகும். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பயிற்சி மிகக்குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படும். அதற்கும் உதவித் தொகைகள் வழங்கப்படும். தேர்வு மற்றும் பயிற்சிக்கான பல்கலைக்கழகச் சான்றிதழுக்கு கட்டணம் இல்லை. மேலும் விவங்களுக்கு 0431-2332638, 89735 23807,63819 16747 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.