சுடச்சுட

  


  திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
  திருச்சி மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர், அமமுக வேட்பாளர் சாருபாலா ஆர். தொண்டைமான், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வி. ஆனந்தராஜா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி. வினோத் உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுகின்றனர்.
   வேட்பாளரின் இறுதிப்பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு தீவிர பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளர்கள்,  இறுதி கட்டப் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.
  தேமுதிக:  வேட்பாளர் 
  வி. இளங்கோவன், செவ்வாய்க்கிழமை காலை திருச்சி பொன்மலை மத்திய ரயில்வே பணிமனை முன்பு தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன், அதிமுக எம்பி ப. குமார் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தேமுதிக-வினர் பலரும் வாக்குகள் சேகரித்தனர். 
  பிற்பகலுக்கு மேல் புதுக்கோட்டை  தொகுதிக்கு சென்று அப்பகுதி மக்களிடையே வாக்குகள் சேகரித்து, இறுதிக்கட்ட பிரசாரத்தை அந்தத் தொகுதியில் முடித்தார்.
  திமுக : திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசர் இறுதி கட்டப் பிரசாரத்தை புதுக்கோட்டையில் முடித்தார்.
  அமமுக: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்  சாருபாலா ஆர். தொண்டைமான், செவ்வாய்க்கிழமை பிற்பகல் திருச்சி நீதிமன்றம்  எம்ஜிஆர் சிலையிலிருந்து பிரசாரத்தை தொடங்கி  உறையூர், தில்லைநகர், கன்டோன்மென்ட் பகுதிகளில் பிரசாரம் செய்து, ஸ்ரீரங்கத்தில் இறுதி கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார். ராஜகோபுரம் அருகே நடந்த பிரசாரத்தில், திரைப்பட நடிகர் செந்தில்  பங்கேற்று, அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசினார். மாவட்டச் செயலர்கள் திருச்சி வடக்கு ஆர்.மனோகரன், மாநகர்  ஜெ. சீனிவாசன், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் ஹஸ்ஸான் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
  மக்கள் நீதி மய்யம்: வேட்பாளர் வி. ஆனந்தராஜா, மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தனது கட்சியினருடன் பிற்பகலில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து தில்லைநகர் பகுதிகளில் வாக்குசேகரித்த அவர், உறையூர் மார்க்கெட் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai