சுடச்சுட

  


  வேலூர் தொகுதியில் தேர்தலை அவசரமாக ரத்து செய்ய என்ன காரணம் என்பதை பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்றார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன்.
  இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டிலோ, நிறுவனத்திலோ எவ்வித பணமும் பிடிபடவில்லை என சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இரு நாள்கள் கழித்து மற்றொருவரின் இல்லத்தில் ரூ.10 கோடி பிடிபட்டதாக செய்தி வெளியானது.
  இத்தொகைக்கும், வேட்பாளருக்கும் சம்பந்தம் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த நிலையில்,  வேட்பாளர் உள்பட3 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
  இவ்வழக்கில் எந்த விசாரணையும் நடத்தாத நிலையில் தற்போது தேர்தலை ரத்து செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் பணம் பிடிபட்டதற்காக தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனில், ரூ.511 கோடி பிடிபட்ட குஜராத், ரூ.348 கோடி பிடிபட்ட பஞ்சாப்பில்தான் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் ரூ.202 கோடி பிடிபட்டதாகக் கூறும் தேர்தல் ஆணையம் ரூ.10 கோடி  கிடைத்த வேலூரில் ரத்து செய்த நிலையில், மீதம் ரூ.190 கோடி கிடைத்த தொகுதிகளில் ஏன் தேர்தலை ரத்து செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
   வேலூரில் தேர்தலை ரத்து செய்ய ஆணையம் பரிந்துரைத்ததா அல்லது பிரதமரின் தூண்டுதலில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளதா எனற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai