சுடச்சுட

  

  2,531 வாக்குச் சாவடிகளில் 12,314 பேருக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு

  By DIN  |   Published on : 17th April 2019 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  திருச்சி மாவட்டத்திலுள்ள 2,531 வாக்குச் சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான பணி ஒதுக்கீடு கணினி வழியே குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
  திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், லால்குடி ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. 
  இத்தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான  பணி ஒதுக்கீடு மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை  கணினி வழியே குலுக்கல் முறையில் நடைபெற்றது.  ஆட்சியர் சு.சிவராசு தலைமையில், தேர்தல் பொதுப் பார்வையாளர் அமித்குமார் இப்பணிகளை ஒருங்கிணைத்தார்.
  இதன்படி மணப்பாறை தொகுதியில் 1,563 பேர், ஸ்ரீரங்கத்தில்  1,646 பேர், திருச்சி மேற்கில்
  1,329 பேர், திருச்சி கிழக்கில் 1,288 பேர், திருவெறும்பூரில் 1,449 பேர், லால்குடி 1,200 பேர், மண்ணச்சநல்லூரில் 1,316 பேர், முசிறியில் 1,232 பேர், துறையூரில் 1,291 பேர் என மொத்தமாக 12,314 பேர் தேர்தல் பணிக்காகத் தேர்வு  செய்யப்பட்டனர்.
  இவர்களில் வாக்குப்பதிவு தலைமை அலுவலர் ஒருவரும், வாக்குப்பதிவு அலுவலர் நிலையில் 3 பேர் என ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,200-க்கும் மேல் வக்காளர்கள் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு அலுவலர் நிலையில் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
   பணி ஒதுக்கீடுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அவரவர் செல்லிடப்பேசிக்கு  குறுஞ்செய்தி மூலம் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு புதன்கிழமை இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. அப்போது, அவரவர் எந்தெந்த வாக்குச் சாவடிகளில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்தார்.
  திருவெறும்பூரில்:  திருவெறும்பூர் வட்டாட்சியரகத்திலிருந்து இத்தொகுதிக்குள்பட்ட 294 வாக்குச்சாவடிகளுக்குத் தேவைப்படும்  100 வகையான பொருள்கள் அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  மாவட்ட வழங்கல் அலுவலரும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்டி தலைமையில், வட்டாட்சியர் அண்ணாத்துரை மற்றும் வருவாய்த் துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.
  இத்தொகுதியில் கூத்தப்பார், சின்ன,பெரியசூரியூர், சர்க்கார்பாளையம் உள்பட 5 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. 179 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai