திருச்சி அரசு மருத்துவமனையில் வாரந்தோறும் 2 நாள்இயங்கும்: ஆட்டிஸம், வர்ம சிகிச்சைப் பிரிவு

திருச்சி அரசு மருத்துவமனையில் வாரத்தில் 4 நாள்கள் செயல்பட்டு வந்த ஆட்டிஸம் மற்றும் வர்ம சிகிச்சைப் பிரிவுகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் வாரத்தில் 4 நாள்கள் செயல்பட்டு வந்த ஆட்டிஸம் மற்றும் வர்ம சிகிச்சைப் பிரிவுகள் இனி புதன், வெள்ளி ஆகிய இரு நாள்களில் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்சி அரசு தலைமை சித்த மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆட்டிஸம் சிறப்புப் பிரிவு மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான வர்ம சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டு, வாரந்தோறும் செவ்வாய், புதன், வியாழன் , வெள்ளி ஆகிய நாள்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த பிரிவு சில நிர்வாக காரணங்களுக்காக இனி, புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாள்கள் மட்டுமே  காலை 8 முதல் பகல் 2 மணிவரை செயல்படும். இந்த நடைமுறை  தற்காலிகமானதுதான்.
இம்மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் ஓமியோபதி மருத்துவம் மற்றும் இயற்கை மற்றும் யோகா மருத்துவப் பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பிரிவுகள் காலை 7.30  முதல் பகல் 12 வரையிலும் பிற்பகல் 3 முதல் 5 மணி வரையிலும் செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com