சுடச்சுட

  


  திருச்சி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் சிந்தாமணி ப.நாகராஜன் (65) வெள்ளிக்கிழமை இரவு உடல் நலக்குறைவால் காலமானார்.
  கீழச்சிந்தாமணி கோரி மேட்டுத் தெருவைச் சேர்ந்த இவர் திருச்சி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளராக இருந்தார். மேலும், திருச்சியில் தனது தாயார் பெயரில் கோவிந்தம்மாள் தமிழ் மன்றத்தை உருவாக்கி வாரந்தோறும் தமிழ்ச்சங்க கூட்டங்களை நடத்தி வந்தார். சைவசித்தாந்த கலாநிதி என்ற பட்டம் பெற்றவர்.
  இவருக்கு, என்.ராணி என்ற மனைவியும், என்.ரெங்கராஜன், என்.பாலமுருகன், என்.கதிரவன் என்ற 3 மகன்களும், என்.புனித கோவிந்தவள்ளி என்ற மகளும் உள்ளனர்.
  சிந்தாமணி ப. நாகராஜனின் இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் சனிக்கிழமை மதியம் நடைபெற்றது. தொடர்புக்கு: 98658 62111.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai