சுடச்சுட

  

  பிளஸ் 2 தேர்வு ஜயேந்திரா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

  By DIN  |   Published on : 21st April 2019 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பிளஸ் 2 தேர்வில் திருச்சி ஜயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  இப்பள்ளியில் தேர்வெழுதிய 254 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் பள்ளியின் தலைவர் தோட்டா.வி.ராமானுஜம், செயலர் எஸ்.குஞ்சிதபாதம், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.மீனா, பள்ளி முதல்வர் எஸ்.லெட்சுமணன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில்,  மாணவர் எல்.டி.பிரதிவி லட்சுமணன், எஸ்.ஸ்ரீனா, ஆர்.வாசுதேவ் ஆகிய மூவரும் சிறப்பிடம் பெற்றனர். மேலும், 8 மாணவர்கள் கணினி அறிவியலிலும், ஒரு மாணவி வணிகவியலிலும், மற்றொரு மாணவி கணக்குப்பதிவியலிலும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். 
  தேசியக் கல்லூரி 94.44 சதவீதம்: பிளஸ் 2 தேர்வில் திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி 94.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 198 பேரில் 187 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்,  எல்.இமானுவேல் ஹசன், எஸ்.கணபதி, எம்.முகம்மது அசரப் ஆகியோர் சிறப்பிடம் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai