சுடச்சுட

  

  வீட்டுக்குள் புகுந்து உறங்கியிருந்தவர்களிடம் நகைகள் திருட்டு

  By DIN  |   Published on : 21st April 2019 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  துறையூரில் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் நகைகளை மர்மநபர் பறித்துச் சென்றார்.  
  துறையூர் கிழக்குத் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(70). இவருடைய மனைவி செந்தமிழ் பூங்கொடி(66). இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள். இவருடைய மகன் கார்த்திகேயன்(36). இவர்கள் அனைவரும் ஏப். 16 ஆம் தேதி இரவு வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் தாழ்ப்பாளைத் திறந்து உள்ளே சென்று உறக்கத்திலிருந்த கார்த்திகேயனின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, செந்தமிழ்பூங்கொடியின் 12 பவுன் தாலிக்கொடி ஆகியவற்றை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai