மணப்பாறையில் தீத்தொண்டு நாள் வார விழா
By DIN | Published On : 21st April 2019 03:20 AM | Last Updated : 21st April 2019 03:20 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தீத்தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து தடுப்பு குறித்து சனிக்கிழமை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மணப்பாறையில் கடந்த ஏப். 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் தீத்தொண்டு நாள் வார விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை மணப்பாறை நிலைய அதிகாரி கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மணப்பாறை பேருந்துநிலையப் பகுதியில் பொதுமக்களுக்கு தீ விபத்து தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தீ விபத்து தடுப்பு குறித்து பேருந்துநிலையத்தில் இருந்த பொதுமக்கள், வணிக நிறுவன பணியாளர்கள், பேருந்து பயணிகள் ஆகியோருக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.