சுடச்சுட

  

  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் திருச்சி மாநகரக் கிளை சார்பில்  கவிஞர் நாணற்காடன் படைப்புகள் குறித்த அறிமுகம், விமர்சனக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு மருது. செல்வராஜ் தலைமை வகித்தார். அப்பாவின் விசில் சப்தம் என்ற சிறுகதை குறித்து கவிஞர்  பாட்டாளியும், நூறு நாரைகளாய் நின் நிலமெங்கும்  என்ற கவிதை நூல் குறித்து பெருமன்ற மாவட்டச் செயலாளர்  கோ.கலியமூர்த்தியும்  விமர்சனம் செய்தனர். கவிஞர் நாணற்காடன் ஏற்புரையாற்றினார்.
  அமுதசுரபி மாத இதழில் முதல் பரிசு பெற்ற தன்னுடைய அப்பா- சிறுகதையை ஆங்கரை பைரவி  வாசித்தார். அருமன் பாரதி, குமார் கந்தசாமி, இராசா ரகுநாதன், வினோத் , பாக்யராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர். கவித்துவன், அதங்கோடு அனீஷ் குமார், பேராசிரியர்கள் மனோன்மணி,  செம்பைமுருகானந்தம், புதுகை செல்வகுமார், பொருளாளர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெருமன்ற மாநகரச் செயலாளர் கவிஞர் சதீஷ் குமரன்  நன்றி கூறினார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai