சுடச்சுட

  

  தமிழ் அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

  By DIN  |   Published on : 22nd April 2019 10:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சியில் தமிழ் அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு தொடர் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
   தமிழகப் பெண்கள் செயற்களம் மற்றும் தமிழரண் மாணவர்கள் சார்பில் உடல் நலம், உழவர் நலம், வருங்கால தலைமுறையை காக்க வலியுறுத்தியும்,  தமிழ் மரபு இயற்கை உணவுப்பொருள்களை மீட்கும்  வகையில் விழிப்புணர்வு தொடர் ஓட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
  தென்னூர் உழவர்சந்தை அரங்கில் தொடங்கிய ஓட்டத்தை விதைகள் அறக்கட்டளை நிறுவனர் மயிலை ப. வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகப் பெண்கள் செயற்களம் ஒருங்கிணைப்பாளர் வி.இசைமொழி தலைமை வகித்தார்.  தமிழரண் மாணவர்கள் தாமரை, ரவி,  விசயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முன்னதாக தமிழரண் மாணவர்கள் அமைப்பின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார்  வரவேற்று பேசினார்.
  சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட  இத்தொடர் ஓட்டம்  தென்னூர் உழவர் சந்தையில் தொடங்கி பட்டாபிராமன் சாலை வழியாக மீண்டும் உழவர் சந்தையை அடைந்தது.  தொடர்ந்து சித்த மருத்துவர் காசி பிச்சை, முத்தமிழ் மன்றத்தின் பொது செயலாளர் அந்தோனி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai