சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் சனிக்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்தன .
  தொட்டியம் பகுதியில் வாழை மற்றும் வெற்றிலை விவசாயம் அதிகளவில் நடைபெறும். இந்நிலையில், வரதராஜபுரம், மகேந்திரமங்கலம், சீனிவாசநல்லூர், கோடியாம்பாளையம், கல்லுப்பட்டி, திரமலையூர், திருஈங்கோய்மலை உள்ளிட்ட பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம்  சுமார் 50 ஆயிரம் வாழைகளை விவசாயிகள் உற்பத்தி செய்து வந்தனர். இச்சூழலில், சனிக்கிழமை இரவு திடீரென லேசான மழையுடன் வீசிய சூறைக்காற்றில் தொட்டியம் பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேலான வாழைகள் காற்றில் முறிந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai